ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
'மா பெரும் பாத்திரம்
மடக்கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசைக் குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க
13-010
தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து
13-020
"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்
13-030
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்
13-040
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
13-050
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?"
"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்
13-060
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும்
"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
13-070
"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என
"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி
13-080
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்
13-090
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே
13-100
தாதை பூதியும் தன் மனை கடிதர
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி
13-110
'காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்
மணிமேகலை |
தமிழிலுள்ள இரண்டாவது காப்பியமாகக் கருதப்படுவது மணிமேகலை. இதற்கு ‘மணிமேகலை துறவு’ என்ற பெயர் உண்டு என்பர். கதையின் தொடர்பால், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி போலுள்ளது. எனவே, சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படுகின்றன என்று பார்த்தோம். இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார்.
|
காப்பியத்தலைவியின் பெயரால் மணிமேகலை என்று இக்காப்பியம் பெயர் பெற்றது. இது மொத்தம் 30 காதைகளை உடையது. ஆயின் சிலம்பில் போல இதில் காண்டப்பகுப்பு இல்லை. சோழநாட்டு நிகழ்வை மட்டுமே மிகுதியாக இது கூறுகிறது. இதில் பௌத்த சமயக் கருத்துகளே பெருமளவில் இடம் பெற்றுள்ளன. புத்தசமயக் கொள்கை பரப்புவதே இதன் நோக்கம். எனினும் இதன் பதிகத்தில் சிலம்பில் சொல்லப்படுவது போலக் காப்பியக் குறிக்கோள் எதுவும் சொல்லப்படவில்லை. சமயக் கணக்கர்தம் திறங்கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஆகியவற்றில் புத்த தத்துவங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
|
காலத்தின் போக்கிற்கு ஏற்ப இலக்கியங்கள் உருவாகின்றன. மணிமேகலை எழுந்த காலம் சமயவாதிகள் தத்தம் சமயமே மெய்ச்சமயம் என்பதை நிலைநாட்ட முயன்ற காலமாகும். இக்காலப்பகுதிப் புலவர்கள் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்ப இலக்கியம் படைத்தனர். வளையாபதி குண்டலகேசி முதலிய காப்பியங்களும் கொள்கைப்பரப்பு நோக்கத்தைக் கொண்டனவே. புத்தநெறியை விளக்குவதற்குச் சாத்தனார் மணிமேகலையின் கதையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். துறவையும் சமுதாயத் தொண்டையும் புத்தநெறியின் சிறப்புக் கூறுகளாகக் கண்டு படைத்திருக்கிறார். சங்க இலக்கியத்தில் காதல் பெற்றிருந்த இடத்தை மணிமேகலைக் காலத்தில் துறவு பெற்றிருப்பதைக் காப்பியம் உணர்த்துகிறது. காதலை வென்று துறவை நிலைநாட்டுகிறாள் மணிமேகலை. உதயகுமரன் இறந்தபின் அறவண அடிகளிடம் சென்று உபதேசம் பெற்று இறுதியில் பவத்திறம் அறுதற்பொருட்டு நோற்கின்றாள்.
|
கதை
|
புகாரில் இந்திரவிழா நடக்குமென முரசறையப்படுகிறது. மரபுப்படி மாதவியும் மணிமேகலையும் விழாவில் ஆடாதது குறித்து அலர் பரவுகிறது. கோவலன் கண்ணகி வாழ்க்கையைப் பற்றிக் கேட்டு மணிமேகலை வடித்த கண்ணீர்பட்டுப் புத்ததேவனுக்குரிய மாலை புனிதம் இழக்கிறது. புதுமாலைக்காகப் பூப்பறிக்கச் சுதமதியுடன் மணிமேகலை உவவனம் செல்கிறாள். மணிமேகலையைக் கைப்பற்றச் சோழ இளவரசன் உதயகுமரன் உவவனம் வருகிறான். அவனைக் கண்ட சுதமதி, மணிமேகலையைப் பளிங்கறையில் ஒளியச் செய்கிறாள். உதயகுமரன் அவள் வெளியே வந்தவுடன் கைப்பற்றக் கருதி வெளியில் செல்கிறான். மணிமேகலா தெய்வம் அங்கு வந்து தோன்றுகிறது. சுதமதியைத் துயிலுறுத்தித் தவத்தின் வித்தாகிய மணிமேகலையை இல்லறத்தில் செல்லாமல் தடுக்க அவளை மணிபல்லவத்திற்கு எடுத்துச் சென்று சேர்க்கிறது. பின் சுதமதியைத் துயிலெழுப்பி நடந்ததைக் கூறுகிறது. சக்கரவாளக் கோட்டத்தின் தன்மையை அவளுக்குக் கூறுகிறது.
|
மணிமேகலை தீவில் தனித்து விடப்பட்டுத் துயர் உறுகிறாள். புத்த பீடிகையைக் கண்டு தன் பழம்பிறப்பு உணர்கிறாள். மணிமேகலா தெய்வம் தோன்றி மந்திரம் அளிக்கிறது. தீவதிலகை எனும் தெய்வப் பெண் அமுதசுரபி என்னும் பாத்திரத்தை அவள் பெறச் செய்கிறாள்.
|
மணிமேகலை புகார் திரும்பிவந்து தாயுடன் அறவணரைக் கண்டு தொழுகிறாள். அமுதசுரபியை முதன்முதலில் பெற்ற ஆபுத்திரன் கதையைச் சொல்கிறாள். பாத்திரத்தின் சிறப்பைச் சொல்கிறாள். பாத்திரத்தில் முதல் பிச்சை வாங்கச் சென்று ஆதிரையிடம் பிச்சை வாங்குகிறாள். ஆதிரை பிச்சையிடுகிறாள். புகாரின் உலக அறவியல் புகுந்து பாத்திரத்தின் உதவியால் பசியை ஒழிக்கிறாள். உதயகுமரன் அவளைக் கைப்பற்ற அவளிருக்கும் அம்பலம் புகுகின்றான். மணிமேகலை அறிவுரை கூறுகிறாள். பின் காயசண்டிகை என்பவளின் வடிவெடுத்துச் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குகிறாள். மீண்டும் உதயகுமரன் காயசண்டிகை வடிவிலிருந்த மணிமேகலையை நெருங்க, அங்கு வந்த காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் தன் மனைவியிடம் அவன் தவறாக நடக்கிறான் என்று கருதி வாளால் அவனை எறிந்து கொல்கிறான். மணிமேகலை, உதயகுமரன் தன் பழம்பிறவிக் கணவன் என்பதால் தொடப்போகிறாள். கந்திற்பாவை என்ற தெய்வம் அவளைத் தடுத்து, வருவது உரைக்கிறது. உதயகுமரன் இறப்பிற்குக் காரணமான மணிமேகலை சிறை செய்யப்படுகிறாள். அரசமாதேவி அவளைப் பழிதீர்ப்பதற்காகச் சிறைவிடுத்துத் தன்னுடன் வைத்துத் துன்புறுத்துகிறாள். மந்திர ஆற்றலால் துன்புறுத்தலிலிருந்து தப்பிய மணிமேகலை அவளுக்கு அறமுணர்த்திய பின்னர், ஆபுத்திரன் மறுபிறப்பு எடுத்துப் புண்ணியராசன் என்ற அரசனாக இருக்கும் நாட்டை அடைகிறாள். புண்ணிய ராசனான ஆபுத்திரனை அழைத்துக்கொண்டு மணிபல்லவம் அடைகிறாள். பின் வஞ்சிமாநகர் செல்கிறாள். கண்ணகியை வழிபடுகிறாள். பல சமயக் கணக்கர்களின் திறனைக் கேட்கிறாள். காஞ்சிமாநகர் செல்கிறாள். தவக்கோலத்தில் அறக்கருத்துகளைக் கேட்கிறாள். தன்பிறவி ஒழிக என அப் பாவை நோற்கிறாள்.
அறக்கருத்துகள் |
புத்தசமயக் கருத்துகள் பல இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. அறம் என்றால் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஓர் அரிய விளக்கம் கூறுகிறது
|
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில். |
(ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை: 228 - 230)
|
கள்ளுண்ணாமை, கொல்லாமை முதலான அறங்களை வலியுறுத்திச் செயலுக்கேற்ப நமக்கு சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று உணர்த்தும் பகுதி இது.
|
மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்தோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்தோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். |
(ஆதிரை பிச்சை இட்ட காதை: 84 - 90)
|
இளமையும் உடம்பும் நிலையானவை அல்ல; செல்வமும் நிலையானது அல்ல; அறமே நிலைத்தது, என்றும் துணையாக இருப்பது என்பது,
|
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது. |
(சிறைசெய் காதை: 135 - 138)
|
என்று காட்டப்படுகிறது.
|
பிறவி, துன்பம் என்பதையும் அத்துன்பத்தை அடையாமலிருக்கப் பிறவாமை எய்தவேண்டும் என்பதையும் மணிமேகலை கூறுகிறாள்.
|
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம். |
(ஊர் அலர் உரைத்த காதை: 64 - 65)
|
உதயகுமரனின் சாவில் வருந்தும் அவள் தாயிடம் மணிமேகலை, ஆறுதல் கூறுவதாக வரும் பகுதியில் உயிர் என்பது வேறு ஒரு பிறவியில் வேறு உருவெடுக்கும். அதனால் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
|
உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ
உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வு அரியது
அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும். |
(சிறைவிடு காதை, 73 - 79)
|
இன்னோர் இடத்தில், பசிப்பிணியின் கொடுமையும் அதைத் தீர்ப்பதன் நன்மையும் எடுத்துரைக்கப்படுகின்றன.
|
பசியின் கொடுமையைக் கூறுகையில், ‘அது நல்லகுடியில் பிறந்து பெற்றிருக்கும் நல்ல தன்மைகளை அழித்துவிடும்; நம் பெருமைகள், கல்வியறிவு, நாணம், தோற்றம் அனைத்தையும் கெடுக்கும்; இல்லத் துணைவியோடு தெருவில் நிற்கச்செய்யும் என்று உணர்த்துகிறது மணிமேகலை.
|
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே. |
(பாத்திரம் பெற்ற காதை: 76 - 80, 95 - 96)
|
என, உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்துகிறது.
|
இவ்வாறு பல அறவுரைகள், குறிப்பாகப் புத்த சமய கருத்துகள் காப்பியத்தில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன, புத்த சமயச் சொற்களை மொழிபெயர்த்துத் தருகிறார் சாத்தனார். பன்னிரு நிதானங்கள், நான்கு வகைச் சாத்தியங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். பல காதைகளில் புத்த தத்துவங்கள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. திரிபீடகத்தில் உள்ள புத்தரின் பேருபதேசம் ‘பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை’யில் காட்டப்படுகின்றது.
|
அறநெறிக்காலத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு சமயங்கள் பற்றியும் மணிமேகலை கூறுகிறது. சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் பத்து வகைச் சமயங்கள் காட்டப்படுகின்றன. மணிமேகலை ஐந்து வகைச் சமயங்களை அறிந்தவள். இச்சமயக் கொள்கைகளை அவள் மறுக்கிறாள். வைதிகம், உலோகாயதவாதம், ஆசீவகம், வைசேடிகம் ஆகியவை மறுக்கப்படுகின்றன. வஞ்சி நகரில் சமயக்கணக்கர் பலர் இருந்தது கூறப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழாவின் போது பட்டிமன்றங்களில் சமயவாதிகள் உறுதிப்பொருள்கள் குறித்து வாதிட்டதாகச் சொல்லப்படுகிறது. தமிழ் மக்களைக் கவரச் சமயங்கள் போட்டியிட்டதை இவ்விலக்கியம் நன்கு காட்டுகிறது.
|
பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சிறை ஒழிப்பு, பரத்தமை ஒழிப்பு, கொலைகளவு ஒழிப்பு எனப் பல சீர்திருத்தங்களை இக்காப்பியம் பேசுகிறது. அமுத சுரபி என்ற பாத்திரக் கற்பனை பசியொழிப்பிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறப்பால் பெருமையில்லை, செய்கையால்தான் பெருமையுண்டு என இக்காப்பியம் நிறுவுகிறது.
|
பிற சமயங்களின் கொள்கைகளையும் எடுத்துக்காட்டிப் புத்தசமயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருப்பது இலக்கியத்தைக் கொள்கை பரப்பும் கருவியாக ஆக்கியிருக்கும் முக்கியமான மாற்றத்தை உணர்த்துகிறது. ஊன்துவை அடிசில் உண்டு பழங்கள்ளை மாறிமாறி அரசனும் குடிகளும் மாந்துவதைப் பெருமையாக விதந்து பேசும் சங்க இலக்கியத்தடம் மாறிப் புலால் மறுத்தலையும் கள்ளுண்ணாமையையும் மணிமேகலை வற்புறுத்துவது குறிப்பிடத்தக்க மாற்றமெனலாம்.
பெருங்கதை |
பைசாச மொழியில் குணாட்டியர் எழுதிய ‘பிருகத்கதா’ என்னும் நூலின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பாகிய துர்வீநீதனின் ‘பிருகத்கதா’ (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) நூலை ஒட்டித் தமிழில் இயற்றப்பட்டது பெருங்கதை. நூலின் மொழியமைப்பு இது கி.பி. 7ஆம் நூற்றாண்டு சார்ந்ததாக இருக்கலாம் எனக் காட்டுகிறது. இது கோசாம்பி நகர மன்னன் உதயணன் கதையைக் கூறுகிறது. பெருங்கதையை இயற்றியவர் கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள் குடும்பத்தைச் சார்ந்த கொங்குவேளிர். இதனால் இந்நூலுக்குக் ‘கொங்குவேள் மாக்கதை’ என்று இன்னொரு பெயருமுண்டு. நூலின் முற்பகுதியும் பிற்பகுதியும் சிதைந்துள்ளன. உஞ்சைக்காண்டம், இலாவாணகாண்டம், மகதகாண்டம், வத்தவகாண்டம், நரவாணகாண்டம் என ஐந்து காண்டங்களில் முறையே 27, 20, 16, 17, 9 என 99 காதைகளைக் கொண்டது இக்காப்பியம். முழுமையற்ற நிலையில் இக்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ளது. நூலின் கதைத்தொடர்பை இந்நூலின் சுருக்கமாக அமைந்துள்ள ‘உதயணகுமார காவியம்’ என்ற நூல் நமக்கு உணர்த்துகிறது.
|
உதயணகுமார காவியத்தில் ‘துறவுக்காண்டம்’ காணப்படுவதால் பெருங்கதையிலும் நரவாண காண்டத்தைச் சார்ந்து துறவுக்காண்டம் இருந்திருத்தல் வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீவக சிந்தாமணியில் முக்தி இலம்பகம் இருப்பதும் சூளாமணியில் துறவுச்சருக்கம் இருப்பதும் இக்கருத்தை அரண்செய்கின்றன எனலாம். யாப்பருங்கல விருத்தியில் குடமூக்கிற் பகவர் என்பார் பாடியுள்ள ‘வாசுதேவனார் சித்தம்’ பற்றிய குறிப்பு உள்ளது. அதுவும் உதயணன் கதையைத் தமிழில் செய்த நூல் என்பர். இக்கதை நாடெங்கும் பரவியிருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே தமிழில் இக்கதை இடம்பெற்றதில் வியப்பில்லை. அதுமட்டுமன்றி இது வடமொழி தமிழ்மொழி இவற்றுக்கிடையேயான இலக்கியப் பரிமாற்றத்தையும் உணர்த்துகிறது. கொங்குவேளிரின் மொழியாற்றலும், யாப்புத்திறனும், கற்பனைவளமும், புலமைநலமும் காரணமாகப் பெருங்கதை ஒரு முதல்நூல் போலவே தோன்றுகிறது. பெருங்கதை 1924இல் உ.வே.சா.வின் குறிப்புரையோடு வெளியிடப்பட்டுள்ளது.
|
இது சமணக்காப்பியம். சமணக்காப்பியங்களில் தனிச்சிறப்புடையது. சமண சமயக் கருத்துகள் இதில் மிகுதியாக உள்ளன. அக்கால மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் இது எடுத்துரைக்கிறது. மேலும் ஊழின் வலி, நட்பினர் கடமை, அரசாட்சி முறை, நீத்தார் பெருமை ஆகியவையும் இதில் கூறப்பட்டுள்ளன.
|
சங்க காலத்தில் செல்வாக்காக இருந்த அகவல் என்ற செய்யுள் வகையால் இது இயற்றப்பட்டது.
|
|
உதயணனின் தாய்வழித் தாத்தா சேடகன் வைசாலியைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டினை ஆண்டுவந்தான். அவனுடைய 9 மகன்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்ததால் கடைசிமகன் விக்கிரமனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் துறவு பூண்டான்.விக்கிரமனின் தங்கைமகனே உதயணன். உதயணன் தந்தை வத்த நாட்டு அரசனான சதானிகன். உதயணனின் நண்பன் யூகி. யூகியின் தந்தை பிரமசுந்தரமுனிவர் உதயணனுக்கும் யூகிக்கும் வித்தைகள் கற்றுக்கொடுத்தார். கோடபதி என்னும் தெய்வயாழையும், யானையினை அடக்கியாளும் மந்திரத்தையும், யூகியையும் உதயணனுக்கு உறுதுணையாக முனிவர் ஒப்படைத்தார். விக்கிரமனும் துறவு பூண ஆசை கொண்டு தங்கைமகன் உதயணனிடம் ஆட்சியை ஒப்படைத்தான்.
|
உதயணன் சேதிநாட்டு அரசனானான். யூகியை முதலமைச்சர் ஆக்கினான். உதயணன் தந்தை சதானிகன் தன்னுடைய வத்த நாட்டு ஆட்சிப்பொறுப்பையும் மகனிடம் ஒப்படைத்தான். உதயணன் சேதிநாட்டை யூகியிடம் ஒப்படைத்தான்.
|
உஞ்சை (உஜ்ஜயினி) நகரைத் தலைநகராகக் கொண்டு அவந்தி நாட்டை ஆண்ட மன்னன் பிரச்சோதனன். அவன் மகள் வாசவதத்தை. திறை செலுத்த மறுத்த உதயணனை வஞ்சனையால் பிரச்சோதனன் சிறைபிடித்தான். யூகியின் அறிவுத்திறனால் உதயணன் தடைகளைத் தாண்டினான். பிரச்சோதனன் மகன்களுக்குப் படைக்கலப் பயிற்சி அளிக்கவும் மகள் வாசவதத்தைக்கு யாழ்ப்பயிற்சி தரவும் உதயணன் பொறுப்பேற்றான். வாசவதத்தையைக் காதல்மணம் புரிந்தான்.
|
பாஞ்சாலநாட்டின் அரசன் ஆருணியுடன் உதயணன் பிரச்சோதனன் சார்பில் போரிட்டான். ஆருணி அடிமையாக்கி வைத்திருந்த கோசல அரசன் மகள் மானனீகையை விடுவித்துத் தன் மனைவி வாசவதத்தையின் பணிப்பெண்ணாக ஆக்கினான். மானனீகையின் பந்தாடும் திறன் கண்டு காதல் கொண்டு அவளை மணந்துகொண்டான். காசிராசன் மகள் பதுமாவதியையும் உதயணன் மணந்துகொண்டான். விரிசிகை என்ற முனிவரின் மகளையும் மணந்துகொண்டான்.
|
வாசவதத்தைக்கும் உதயணனுக்கும் பிறந்த மகன் நரவாணதத்தன். இவன் மதனமஞ்சிகை என்ற பெண்ணை மணந்துகொண்டான். வித்தியாதரர் உலகத்திற்கு அரசனாகும் பேற்றினைப் பெற்றான். முடிவில் உதயணன் தன் ஆட்சிப்பொறுப்பைப் பதுமாவதி மூலம் பிறந்த மகனிடம் ஒப்படைத்துத் தவம் பூண்டான். அவனுடைய தேவியரும் தவம் மேற்கொண்டனர்.
தனித்தன்மைகள்
|
ஆட்சி, போர், சூழ்ச்சி, மீட்சி, திருமணம், இன்பம், மக்கட்பேறு, துறவு, தவம் என்று பல்வேறு கூறுகளை வெளிப்படுத்தினும் இறுதியில் துறவறமே உயர்ந்தது என்ற சமணக் கருத்தை இது வலியுறுத்துகிறது.
|
பல புதிய சொல்லாட்சிகளை இது கொண்டிருக்கிறது. ஆடற்கலை, போர்ப்பயிற்சிக்கலை, இசைக்கலை, மந்திரக்கலை, ஆட்சிக்கலை, சோதிடக்கலை, மருந்தியல் எனப் பல துறைகளின் அறிவையும் ஆசிரியர் புலப்படுத்தியிருக்கிறார்.
|
உஞ்சைக் காண்டத்து 38 முதல் 42 வரை உள்ள காதைகள் நீராடலை வருணிக்கின்றன. இங்குப் பேதை, பெதும்பை, மங்கை, அரிவை, தெரிவை ஆகியோரின் நீர் விளையாட்டு வருணனை இடம்பெறுகிறது. உலா இலக்கியத்தில் ஏழு பருவப் பெண்கள் இடம்பெறுதலுக்கு முன்னோடிபோல இது அமைந்துள்ளது. உதயணன் வாசவதத்தையைக் கவர்ந்துசெல்லும்போது மருதநிலம், முல்லைநிலம், குறிஞ்சிநிலம், பாலைநிலம் ஆகியவற்றையும் நருமதை ஆற்றையும் கடக்கும் நிகழ்வு சொல்லப்படுவதன் வாயிலாக நானில அழகும் ஆற்றின் சிறப்பும் உணர்த்தப்படுகின்றன. திருமண நிகழ்வுகள், பல காதைகளில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருப்பது பண்பாட்டுக் குறிப்பாக அமைகிறது. அதுபோல மகளிர் பந்தாடும் நிகழ்வு விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதும் பிற்கால இலக்கியங்களில் இடம்பெறும் மகளிர் ஆடல் நிகழ்வுகளுக்கு முன்னோடி எனலாம். சிந்தாமணி, சூளாமணி முதலானவற்றில் பெருங்கதையின் இந்த வருணனைகளும் நிகழ்வுகளும் பின்பற்றப் பட்டிருக்கின்றன.
|
சிந்தாமணி போன்ற காப்பியங்களை விடச் சங்கச் செய்யுளுக்கு நெருக்கமானது பெருங்கதை. ஆசிரியப்பா வடிவத்தால் மட்டுமன்றி, முதல், கரு, உரி என்னும் சங்க இலக்கிய வெளிப்பாட்டு மரபைப் பின்பற்றியிருப்பதாலும், சங்கத் தமிழ்ச் சொல்லாட்சியாலும் இந்த உண்மையை உணரலாம். முல்லைத்திணை, கார்கால வருணனை அழகாகச் சொல்லப்பட்டிருப்பதை உதாரணமாகக் காட்டலாம்.
|
பொருள்வயிற் பிரிவோர் வரவுஎதிர் ஏற்கும்
கற்புடை மாதரின் கதுமென உரறி
முற்றுநீர் வையகம் முழுதும் உவப்பக்
கருவி மாமழை பருவமோடு எதிர. . . .
மண்ணக மடந்தையை மண்ணுநீராட்டி
முல்லைக் கிழத்தி முன்னருள் எதிர . . . . .
முறுவல் அரும்பிய முல்லை அயல
குரவும் தளவும் குருந்தும் கோடலும்
அரவுகொண் டரும்ப |
(காதை 49, அடிகள் 76-101) |
|
|
|
No comments:
Post a Comment